udhayanidhi stalin started his campaign for lok shaba election from today

நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.