Allu arjun inagurated his wax statue at dubai

தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகரான அல்லு அர்ஜூன் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்கள் கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாகினார்.தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி மேலும் ஒரு உற்சாகமான சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, துபாயில் உள்ள பிரபல மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தனது மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். இந்த நிலையில், தற்போது அந்த மெழுகு சிலையை அல்லு அர்ஜூன் திறந்து வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.